உயர்தனிச் செம்மொழியாகிய தமிழின் பெருமையையும் , தமிழ் வ்ரலாறு மற்றும் தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைப்பதின் மூலம் தமிழ்மொழிப் பற்றையும் , பண்பாட்டையும் வளர்த்தல் .
இன்றைய அவசர உலகில் மாணவர்களுக்குத் தேவைப்படும் நீதியையும், அறக்கருத்துக்களையும் தமிழ் இலக்கியங்களின் வாயிலாக அறிவுறுத்தி பண்பாடுமிக்க மாணவ சமுதாயத்தினை உருவாக்குதல்
தமிழ்த்துறை: தமிழ்த்துறை 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்துறையில் இளம் அறிவியல் மற்றும் இளங்கலை ஆங்கிலத்துறை சார்ந்த மாணவர்கள் பொதுத்தமிழ் பாடம் பயின்று வருகின்றனர். பொதுத்தமிழ் பாடப்பிரிவில் பல்கலைக்கழகத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர். பல்கலைக் கழகக் கல்லூரி அளவில் தரவரிசையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் தரம் இடங்களை பெற்றுள்ளனர்.
கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் இளங்கலை பிரிவில் தமிழ் இலக்கிய வகுப்பு பாடம் தொடங்கப்பட்டது. இளங்கலைத் தமிழ் இலக்கிய வகுப்பு பிரிவில் அதிக அளவில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். பல்கலைக் கழகத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்த மாதம் ஒரு முறை தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.